கருணை கிழங்கு மூல நோயை குணமாக்கும்!

வாழ்த்துக்கள்!

தேரையர் சொல்லித்தந்த எளிய மருந்துகளில் இதுவும் ஒன்று! மூல நோய்க்கான மருந்து! தேரையர் வைத்திய நூலில் 237 மற்றும் 238 பாடல்களில் சொல்லப்பட்ட பாடலின்,

தெளிவான விளக்கத்துடனும், எளிய பொருட்களைப் பயன்படுத்தியும், மூல நோயைக் குணமாக்குகிற  பக்குவத்தையும்  இங்கே பதிவிடுகிறோம்!

நமது தேரையர் தமது காலத்திலேயே, மூல நோய்க்கு இந்த மருந்தைக் குறிப்பிட்டுள்ளார் என்பது வியப்பளிக்கிறது!

இன்றைய நவீன சிகிச்சைகள் மற்றும் இதர நடைமுறைகளில், மூல நோயை குணப்படுத்த தொழில்நுட்பத்துடன் கிடைத்தாலும்,

சித்தர்களாலும், நம் மூதாதையர்களாலும்,  காலங்காலமாக பரிந்துரைக்கப்பட்ட இயற்கையான மருந்துகள் மிகத் துல்லியமாக நோய் தீர்க்கும் மருந்துகளாக இருப்பதால், இன்றும் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன!

சித்த மருந்துகள் இன்றும் மக்களால் விரும்பப்படுவதற்கு இன்னொரு காரணமாக இருப்பது,

எந்த நோயாலும் பாதிக்கப்பட்டாலும், அதற்கான சரியான மருந்துகளை, நம் முன்னோர்கள் அனைவருக்கும் எளிதாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி, அனைவருக்கும் குணம் கிடைக்கும் மருந்துகளாக பரிந்துரைத்துள்ளனர்!

எந்த ஒரு பாரபட்சமும் இன்றி, எந்தக் சாதிப்  பாகுபாடு இல்லாமல், நம் சித்தர்கள் வழங்கிய மருந்துகள் நிச்சயம் போற்றத்தக்கவை!

சித்தர் தேரையர் சொன்ன வாத வைத்தியம் எனும் நூலில், 237மற்றும் 238வது பாடலில் மூல நோய்க்கு கருணைக் கிழங்கின் மருத்துவ பயன் பற்றி  சொல்லியிருப்பதையும், பக்குவத்தையும் பார்ப்போமா?

பல ஆரோக்கிய நன்மைகள் கொண்ட பொதுவாகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும் கிழங்கு வகைகளில் ஒன்று ‘கருணை கிழங்கு’ (Indian yam)

கருணைக் கிழங்கின் பயன்களாக சொல்லப்படுவது

சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கவும்,

பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள், மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வழியைக் குறைக்கவும், நாற்பது வயதுக்குமேல், மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும், வலியுடன் கூடிய ரத்தப்போக்கையும் தடுக்கிறது.

உடலில் இழந்த வலிமையை மீண்டும் தருகிறது.

பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதல் நோயிலிருந்து குணமாக்குகிறது. பெண்களின் ஹார்மோன் பிரச்சினைக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

  • உடல் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.
  • கொழுப்பு குறைப்பு, உடலின் எடையை குறைக்கவும் பயன்படுகிறது.
  • நெஞ்செரிச்சல், மற்றும் அல்சர் தொடர்பான நோய்கள் குணமாகவும்,
  • இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளிலிருந்து காக்கிறது.
  • மேலும் மலச்சிக்கல், மற்றும் மூல நோய்கள்  குணமாகவும், கருணை கிழங்கு (Indian yam) பயன்படுகிறது.

மருத்துவப் பலன்களையடுத்து, நமது தேரையர் சொல்லித்தந்த கருணை கிழங்கு லேகியம் செய்யும் பக்குவத்தை பார்க்கலாமா?

தேவையான பொருட்கள்:

200 கிராம் நறுக்கிய கருணை கிழங்கு (Indian yam)

200 கிராம் நறுக்கிய மெருகன் கிழங்கு(Alocasia macrorrhizos)

200 கிராம் நறுக்கிய அமுக்காரா கிழங்கு

200 கிராம் நறுக்கிய சின்ன வெங்காயம்

500 கிராம் நெய்

500 கிராம் நாட்டு சர்க்கரை  

கருணைக்கிழங்கு (Indian yam), மெருகன் கிழங்கு, அமுக்காரா, சின்ன வெங்காயம் இந்த நான்கு பொருட்களையும், சேர்த்து அரைத்து எடுத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, அடுப்பேற்றி, தூய நெய்யில் வறுக்க வேண்டும். கூடவே சர்க்கரையையும், கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மெழுகுபதம் வரும்வரைக்கும் கிண்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த லேகியத்தை தினமும், ஒரு நாளைக்கு இரண்டு முறையாக (காலை மற்றும் மாலை) ஒரு ஸ்பூன் அளவு அல்லது ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு எடுத்து மூன்று நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும் என்று நம் சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார்!

இந்த கருணைக்கிழங்கு லேகியத்தை மூல நோய்க்கு உண்ணும்போது, உப்பு, புளி, காரம் சேர்த்துக் கொள்ளலாமலும், இச்சா பத்தியமாக இருப்பதும் மூலநோய் விரைவில் குணமாகும் என்றும்   குறிப்பிட்டுள்ளார்!

தேரையர் சொன்ன பாடலில், குறிப்பிட்டுள்ள

கருணைக்கிழங்குடன், மெருகன் கிழங்கு, அமுக்காரா கிழங்கு சின்ன வெங்காயம் போன்ற பொருட்களை சேர்க்க சொல்லியிருக்கிறார். கருணைக்கிழங்கு, சின்ன வெங்காயம் காய்கறிக் கடைகளிலும், மெருகன் கிழங்கையும், அமுக்காரா கிழங்கையும், நாட்டு மருந்துக்கடைகளிலும், வாங்கிக்கொள்ளலாம்.

மெருகன் கிழங்கு என்ற மற்றொரு மூலப்பொருளானது, பொதுவாக வனப்பகுதிகளில் காணப்படும். வீட்டு சமையலில் இதை பயன்படுத்தப்படவில்லை என்றாலும், சித்த மருந்துகளில் இந்த மெருகன் கிழங்கு, மூலப்பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது!

மெருகன் கிழங்கு வயிற்று நோய்கள், மூலநோய்க்கும், உடல் வெப்பநிலை மற்றும் நீரிழிவு நோய்க்கும் சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘அஸ்வகந்தா’ என்று பொதுவாக அழைக்கப்படும் ‘அமுக்காரா கிழங்கு’ சோம்பல் மற்றும் நரம்புத் தளர்ச்சியைப் போக்கி, உடலில் ஆற்றலைத் தருவதில், சிறப்பான பலன்களைத் தரும்.

சின்ன வெங்காயம் சாறு/சாறு

அதிகப்படியான உடல் சூட்டைக் குறைக்கவும், காயங்களை ஆற்றவும் உதவுகிறது!

‘சொரிந்த ரத்த மூலம்’ எனப்படும் மூலநோயால்

ஏற்படும் இரத்தத்துடன் வரும் வலியை போக்கும்.

மூலநோயின் ஆரம்ப அறிகுறிகளும் குணமாகும் என்றும், மாதவிடாய் வலியைப் போக்கவும் இது பயனுள்ளதாக இருக்குமென்றும், சித்தர் தேரையர் குறிப்பிட்டுள்ளார்!

கருணை கிழங்கை மாதத்திற்கு இரண்டு முறையாவது, வெவ்வேறு உணவு வகைகளில் சேர்ப்பது சிறந்த ஆரோக்கியம் தரும்!

சித்தர் தேரையர் சொல்லித்தந்த, மதிப்புமிக்க தகவல்களை தெரிந்து கொள்வது நல்லதுதானே!

பதிவை பகிர்ந்து கொண்ட அன்பர்களுக்கு நன்றி!

Leave a comment