கரிப்பான் (கரிசாலை) கீரையில் இப்படி ஒரு மகத்துவம் இருக்குதா?

வணக்கம் நண்பர்களே!

கருவூரார் வாத காவியம் 700 ல், இந்த கரிப்பான் கற்பம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இதெல்லாம் நடக்குமா? கனவு காண்ற மாதிரி இருக்குதுன்னு கூட ஆச்சரியப்பட வைக்கலாம்! உண்மையிலேயே, இந்த கரிப்பான் (கரிசாலை) கீரையில் இப்படி ஒரு மகத்துவம் இருக்குதா?

கருவூரார்  சொல்றத பார்த்துட்டு, அப்புறமா ஆச்சரியப்பட்டுக்கலாம்னு சொல்லிட்டு, பாடலுக்குள்ள போகலாமா?

ஆயிரம் வயதல்லாமல் அஷ்ட சித்தியுண்டாம்

ஓயதோர் கரிப்பான் தன்னை யுதரியே கழுவிப்போட்டுத்

தூயதோர் சாற்றை வாங்கிக் சுகமுடன் சுண்டக் காய்ச்சி

நேயமாய்க் அண்ணாக்கிற்குள் நேர்மையாய்த் தடவிப்பாரே

கொண்டிடத் திங்களப்பா குறைவில்லை காந்தியுண்டாம்

பண்டுபா தாளலோகம் பரிவுடன் தெரியுமப்பா

அண்டமே லவனுக்குத்தான் யானையின் பலமுண்டாகும்

உண்டிடு இந்த வீதம் ஓரஞ்சு மாதங் கொள்ளே

 ‘’ஆயிரம் வயதல்லாமல் அஷ்ட சித்தி உண்டா?’’, ஆயிரம் வயசானாதான் அஷ்டசக்தியும் கிடைக்கும்ங்கறது இல்ல, அதுக்குள்ளேயே, இளமையா இருக்கிறபோது அஷ்ட சித்திகளும் கிடைக்கிறதுக்கும் வழி இருக்குன்னு சொல்லிட்டு, கரிப்பான் செடியை எடுத்துக்கனும்னும் சொல்கிறார்!

கரிப்பான் செடிக்கு  கரியசாலை, கையாந்தகரை, கரப்பான், கரிசாலை அப்படின்னு பல பெயர்கள் இருக்கின்றன. கரிப்பான் செடியை எடுத்து உதறிட்டு, கழுவிட்டு சாறு எடுத்துட்டு,  அந்த கரிப்பான் செடியோட சாறை, நல்லா சுண்ட காய்ச்சிட்டு, அந்த சாறை அண்ணாக்குல தடவி பாரு! அப்படிங்கிறார். அண்ணாக்குல படுற மாதிரி சாறை குடிச்சுடுங்கோ, அப்படின்னுதான் அர்த்தம். கரிப்பான் செடியோட சாற்றை எடுத்து, சுண்ட காய்ச்சிட்டு ஒரு மாசத்துக்கு, காலைல இந்த சாற்றை ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வர்ற போது, அடடடா!

  • உடல்அழகு பெறுமென்றும்,
  • உடம்புல இருக்குற தோல் நோயெல்லாம் போய்விடுமென்றும்,
  • தோலில் நல்ல நிறம் பெற்று, ஆரோக்கியத்துடனும், பிரகாசமாகவும் இருக்குமென்றும்,
  • கண் பார்வை கூட கூராகி, பாதாள லோகத்தில் இருக்கிற பொருட்களெல்லாம் காணமுடியுமென்றும்,
  • யானையின் வலிமையையும், பலமும் வந்துடுவிடுமென்றும் சொல்லிட்டு,

அதுமட்டுமல்ல, கரிப்பான் செடி சாறை எடுத்து, சுண்ட காய்ச்சிட்டு, ஒரு அஞ்சு மாசத்துக்கு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிடலாம்னும், சாப்பிட்டு வரணும்னும் சொல்லிட்டு,

கொள்ளப்பா பிர்மா விஷ்ணு கோமனை மேவுருத்திரன்

ஒன்னியே தேவர் தம்மை உசிதமாய்க் காணலாகும்

வள்ளலே பத்துநூறு மார்க்கத்தில் வருவோர் தோற்றும்

மெள்ளவே யுனக்காய்ச்சொன்னேன் நன்றாய்க்கேளே

கேளப்பா வேதைதானும் கிடைத்ததோர் கற்பத்தாலே

நாளப்பா இவனுக்குத்தான் நமனுமே பயந்துபோவான்

வேளப்பா தேகந் தானும் மிகவேதை தங்கந்  தங்கம்

ஆளப்பா வச்சிர காயமாகுமே அவனுக்கேதான்

இந்த கரிப்பான் செடியோட சாற்றை சாப்பிட்டு வரும் போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களை, ஞானத்தால, மனதார, தவத்தால காண முடியுமென்றும். எந்த திசையிலிருந்து தீமைகள் வந்தாலும், தோற்றுப்போகுமேன்றும், இந்த கரிப்பான் செடியோட சாறு, சாகாவரம் கொடுக்குமென்றும், எமன் அருகில் வருவதற்குக்கூட பயப்படுவானென்றும்,  கரிப்பான் செடியோட சாறு, உடம்பைத் தங்கமா மாத்துறதுக்கு கிடைச்ச தங்கம்னும் கூட இந்த கரிப்பான் சாறை பற்றி சொல்கிறார்! அதுமட்டுமல்ல, உடம்பை வைரம் போல ஆக்கிடும் சொல்லிட்டு

அவனுடல் மூத்திராதி அட்டலோகங்கள் வேதை

இவனுட அழகினாலே எவர்களும் மயங்கு வாரே

சிவனுட மருகனான சித்தனிவனென் பார்கள்

தவஉடம் பதனா விந்தத் தாரணி யுள்ளபெண்கள்

மயக்குவார் வித்தியாத ஸ்ரீகளும் மகிழ்ச்சி கொள்வார்

மயங்குவார் அப்சரஸ்ரீகளும் வந்து பார்த்து

மயங்குவார் தேலலோக ஸ்ரீகளும் மதனாமென்று

மயங்குவார் ரதியிந்திராணி மாதரும் பணிவார் பாரே!

கரிப்பான் செடியோட சாற்றை சாப்பிட்டு வருபவர்களுக்கு, உடம்பு எப்பவுமே இளமையாகவே இருக்கும்னும், தலை முதல் பாதம் வரைக்கும், எல்லா பாகங்களும் இந்த கரிப்பான் செடியோட சாற்றால், நோய் நொடி இல்லாமல் சிறப்பாகவே இருக்குமென்றும், இந்த கரிப்பான் செடியோட சாற்றை சாப்பிட்டு வருகிற போது, சிவனோட மகனான முருகனைப் போல அழகும், தவம்செய்து கிடைத்த உடம்பாக இருக்கிறதால, இந்த உலகத்தில் உள்ள பெண்களெல்லாம், மயங்குவார்களென்றும், தேவலோக பெண்களும், மன்மதனே வந்துட்டாரோன்னு ஒரு வினாடி ஆச்சரியப்பட்டு போவாங்களாம்! எல்லாம் இந்த கரிப்பான் சாற்றால நிறைய நன்மைகளும், பலனும் இருக்குதுன்னு கருவூரார் சொல்லித்தரார்!  உடம்பு நல்லபடியாக இருக்கிறதுக்கும், பெண்களைக் கவருவதற்க்கும், கரிப்பான் சாறு மட்டுமல்ல, அன்பும், பண்பும், நல்ல பழக்கமும், நல்ல கனிவான பேச்சும், நடையும். கண்ணும், கருத்தும் இருந்தால்தான், முடியும்மென்றும் கருவூரார் இவ்வுலக மக்களுக்கு சொல்லி தருவது நல்ல விஷயம் தானே!

பதிவை பார்த்திட்ட அன்பர்களுக்கு நன்றிகள்!

Leave a comment