காணக் கிடைக்காத கனியா?
அவ்வை அதியமானுக்கு கொடுத்த கனியா?
உடம்பு தங்கம் போல மின்னுதற்கும் ஆரோக்கிய வாழ்வுக்கும் கருநெல்லி மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது இந்த கருநெல்லியைப் பற்றி பல சித்தர் பெருமக்களும் பாடலாகவும், பக்குவமாகவும் சொல்லி இருக்கிறார்கள்! மலைப்பகுதிகளிலும், ஆற்றோரங்களிலும், மரத்தில் சிறு சிறு கனிகளாக, கருப்பு வண்ணத்தில் வளர்ந்திருக்கும், கருநெல்லிக் கனியை சாறு எடுத்து, அதற்கு நிகராக தேனும் கூட்டி,சாப்பிடனும்னு அகத்தியரையா சொல்லித்தருகிறார்.
கருநெல்லிக்கு அறிவியல் பெயராக Phyllanthus reticulatus என்று சொல்லப்பட்டுகிறது.. கருநெல்லிக்கு பூலான் பழம், அபரஞ்சி, காட்டு கீழாநெல்லி அப்படின்னு பல பெயர்கள் இருக்குது..
கருநெல்லிகனியை தேனோடு கலந்து சாப்பிட்டு வர்ற போது, உடம்பு வலிமையோடும், சுறுசுறுப்போடும் பளபளன்னு இருக்குற ஜோதி மாதிரி உடம்பு மின்னும்னும் சொல்லிட்டு,கருநெல்லிகனியை எப்படி செய்யறதுன்னு பாக்கலாமா?

காணவே சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு
கருநெல்லிப் பழத்தினுட சாருவாங்கி
பேணவே அதுக்குநிகர் தேனுங் கூட்டி
பிரியமுடன் அந்திசந்தி கொண்டாயானால்
பூணவே வாசியது பொருந்தி நின்று
பூரணமாய்த் தேகமது சித்தியாகும்
ஊணவே தேகமது சித்தியா னால்
ஒருதீங்கு மில்லையடா சோதியாச்சே (1030)
கரு நெல்லிக்கனி ஒரு 500 கிராம் அளவுக்கோ, ஒரு அரை படி அளவுக்கோ எடுத்துட்டு, சாறு எடுத்ததும், அதே அளவுக்கு தேன், நல்ல தேனா பாகு சேர்க்காத தேனா பார்த்து வாங்கி, கருநெல்லி சாறோட கூட சேர்த்து ஒரு கண்ணாடி சீசாவுல போட்டு வச்சுகிட்டு, தினமும் காலையில் சாப்பாட்டுக்கு முன்னால ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, சுமாரா 21 நாளைக்கு சாப்பிட்டு வந்தால், உடம்பு சுறுசுறுப்போடவும், சரியான பலமும் கிடைச்சு, நோயெல்லாம் தீர்ந்து ஆரோக்கியமானதாகவும் ஆகிடும்! உடம்பு ஆரோக்கியமா ஆகிட்டா வேற என்ன கஷ்டம் வரப்போகுதுன்னு அகத்தியரையா கேட்கிறார். அடுத்ததா,
ஆச்சப்பா அந்தரசந் தன்னை மைந்தா
அரகரா விஷரோகஞ் சகலத்துக்கும்
நீச்சப்பா நிலையறிந்து கடாச்சித் தாக்கால்
நீங்காத விஷரோகம் நீங்கிப்போகும்
பாச்சப்பா பதியறிந்து கெதியைக் கண்டு
பதியான கெதிதனிலே பார்வையாகி
பேச்சப்பா பேசாத மவுனங் கொண்டு
பெருமையுட னின்னமொரு பாகங்கேளே (1031)
அதுமட்டுமில்ல கருநெல்லிச் சாறையும், தேனையும் கலந்து சாப்பிட்டு வரும்போது, உடம்பில இருக்கிற விஷ சம்பந்தமான நோய்களெல்லாம் குணமாகிடும்! விஷக்கடி கடுமையா இருக்கறப்போ, இந்த ரசத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விஷக்கடியால பட்ட கஷ்டமெல்லாம் ஓடியே போயிடும்னும், விஷக்கடி குணமானவர்களை பார்க்கிற மக்களெல்லாம், எப்படி இருந்தவர், இப்போ நல்லா ஆரோக்கியமா சௌக்கியமாயிட்டார்ன்னு கூட சொல்ற அளவுக்கு, ஆரோக்கியமான உடம்பா ஆயிடும்! கருநெல்லி ரசம் மட்டுமில்லே இன்னொரு பக்குவத்தையும் சொல்லித் தரேன்னு சொல்லிட்டு,
பாகமுள்ள கருநெல்லிப் பழத்தைமைந்தா
பதமாகத் தானுலர்த்திப் பாண்டத்திட்டு
ஏகமுள்ள மூலிகையாங் கடுக்காய்சேர்த்து
இன்பமுடன் கற்பூரதீபங் கூட்டி
ஆகமுடன் குளித்தயிலம் நன்றாய் வாங்கி
அரிபூசை சிவபூசை அன்பாய்ச்செய்து
தாகமுடன் பரணிதனில் பதனம்பண்ணி
சதானந்த பூரணமாய்த் தன்னைப்பாரே (1032)
கருநெல்லி பழத்தை ஒரு படி அளவுக்கு எடுத்து வெயில்ல காய வச்சு எடுத்துட்டு கடுக்காய் ஒரு அஞ்சு கடுக்காய் எடுத்துட்டு ஒரு கண் சட்டியில போட்டு நல்லா மூடி, மேல நெருப்பு வச்சு குழித்தயிலம் எடுக்கனும்னும் சொல்றார். அப்படி கிடைக்கின்ற குழித் தையிலத்தை சேகரித்து எடுத்துட்டு, அதாவது, காபி கொடிய பில்டர்ல போட்டு எடுக்கிற மாதிரின்னு கூட சொல்லலாம்! குழித்தயிலம் எப்படி எடுக்கணும்கிற விவரத்தை ஒரு வீடியோ பதிவா நான் பதிவிட்டு இருக்கேன். அதை கூட நீங்க பார்த்து தெரிஞ்சுக்கலாம்! அந்த குழித்தலத்தை பத்திரமா ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வச்சுக்கணும்னும் சொல்லிட்டு,
தன்னைத்தான் தானறிந்து தயிலந்தன்னை
சங்கையுடன் பணவிடைதான் தனதாய்க்கொண்டால்
விண்னைத்தானோக்குதற்குக் கெவுனமுண்டாம்
மேலான அண்டமதில் தீபந்தோற்றும்
கண்ணைத்தான் கண்டுமன தறிவினாலே
கற்பூர தீபமதைக் கண்டாறானால்
உண்ணத்தான் வாசியது ஒதுங்காதய்யா
உறுதியுள்ள தயிலமடா ண்டுதேரே (1033)
அடுத்ததா, கருநெல்லிக்கனியும், கடுக்காயும் சேர்த்து குழித்தயிலம் எடுத்ததை, ஒரு பணவெடை அளவுக்கு சுமாரா, அஞ்சு கிராம் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வந்தால் கெவனமார்க்கம் போகலாம்னும்,, தியானத்தில உட்கார்ந்தா நெத்தியில தீபத்தை பார்க்கலாம்னும், அப்படி தீபத்தை பார்த்துட்டா மூச்சானது திடமாகி சீராகிடும்னும் உறுதியான இந்த கருநெல்லி தயிலத்தை சாப்பிட்டு, உடம்பையும், மனசையும் தேத்திக்கோங்கப்பான்னும் சொல்றார்!
சரிப்பா! இந்த கௌனமார்க்கம், யோகம், தியானம், மூச்சுப்பயிற்ச்சி இதெல்லாம் நமக்கு ஒத்துவராதுன்னு சொல்லுறவங்க! பரவாயில்லை!
இந்த கருநெல்லி தயிலத்தை, காலையிலேயும், மாலையிலேயும் மூணு நாளைக்கு சாப்பிட்டு வந்தால் சயரோகம், பாண்டு, குன்மம், மகோதரம் போன்ற நோய்கள் எல்லாம் பறந்து போகும்னு சொல்றார்! சரிப்பா எனக்கு அந்த மாதிரி நோய்கள் எல்லாம் இல்ல! பரவாயில்ல! வாதம், பித்தம் சம்பந்தமான சேர்த்தும நோய்கள் இருந்தால், ஒரு ஐந்து கிராம் அளவுக்கு கருநெல்லி தயிலத்தையும், கூடவே திரிகடுகு சூரணம்,, அதாவது, சுக்கு, மிளகு, திப்பிலி இதையெல்லாம் காய வச்சு பொடியாக்குனதுதையும் சேர்த்து எடுத்து,,ஒரு ஆறு நாளைக்கு சாப்பிட்டாலே நோயெல்லாம் தீர்ந்து, உடம்பு வைரம்போல இறுகி, ஆரோக்கியமானதா இருக்கும்னும் அகத்தியரையா சொல்லித்தருகிறார்!
இந்த கருநெல்லி பழம் சும்மாவே சாப்பிடலாம்! அவ்வை பிராட்டியார், அதியமானுக்குத் தந்த கருநெல்லிக்கனி, இந்த கருநெல்லியாத்தான் இருக்கும்னு கூட சித்தர்கள் சொல்றதுண்டு! இந்த கருநெல்லியாலே மனநோயும், கொடிய சன்னி சுரங்களும் கூட குணமாகும்கிறதோட, கருநெல்லி உடம்பை பாதுகாத்து, எந்த நோயையும் அண்ட விடாதுன்னும், உடம்பை அழியாமல் பார்த்துக்கும்னும் சொல்றதுண்டு! கருநெல்லி பழத்தையோ, கருநெல்லி பழத்தையோ, கருநெல்லி மர வேரையோ எடுத்து, வெயில்ல காய வச்சு பொடிபண்ணி தேன்ல கலந்து சாப்பிட்டு வர போது, நரை திரையெல்லாம் மாறிப் போகுமாம்! நரை திரையெல்லாம் மாறி உடம்பு வலுவாகிறதோட நோய்களை கிட்டே நெருங்கவிடாதுன்னும், இளமையான தோற்றத்தையும், உடல் பொலிவையும் கொடுக்கும்! இந்த கருநெல்லி பழத்தை நாட்டு மருந்துக் கடைகளிலேயும் சொல்லி வைத்து வாங்கிக்கலாம்! மேலும், கருநெல்லி பழத்தோட பயன்களையும், குணங்களையும் சித்த வைத்திய பெருமக்களோட அறிவுரையின் படியும், ஆலோசனையின் படியும் பக்குவமாக செய்து சாப்பிட்டா உடல் ஆரோக்கியத்துக்கும், சந்தோசமான வாழ்க்கைக்கும் குறைவே வராதுன்னும் சொல்றார் அகத்தியரையா!
நல்ல விஷயம் தானே!
பதிவை பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும், கோடான கோடி நன்றிகள்!