அகத்தியரய்யா சொன்ன அற்புதமான பக்குவம்!
வணக்கம் நண்பர்களே!
அகத்தியர் ஐயா, இந்தப் பக்குவத்தை பரிபூரணம்-1500 நூலில் மிக எளிதாக இரண்டே இரண்டு பாட்டுல பொன்னாங்கண்ணி மூலிகையோட மகத்துவத்தை சொல்லித்தருகிறார்! கண் கண்ணாடி இல்லாமலே, வெறும் கண்ணாலே கைலாசம் பாக்கறதுக்கும், பகல்லையே நட்சத்திரத்தை பாக்குறதுக்கு முடியும்னு சொல்லித்தரார்.
பொன்னாங்கண்ணிக்கு (தாவரவியல் பெயர்:Alternanthera sessilis) கொடுப்பை, சீதை, சீதேவி, சீதளம் என்னும் வேறு பெயர்களும் உண்டு.

வானத்தில் நட்சத்திரங்களை எல்லாம் பார்க்க முடிஞ்சா, கைலாசத்தை பார்க்கிறது கஷ்டமா என்னன்னு இந்த பொன்னாங்கண்ணி நெய் கேட்கவைக்கும் சொல்லிட்டு, இந்த பாட்டுல சொன்ன இந்த பொன்னாங்கண்ணி நெய் கலப்படம் இல்லாத நெய்!! கண்ணுக்கு வலிமை கொடுக்கிற நெய்! உடம்புக்கு குளிர்ச்சி கொடுக்கற நெய்!
சித்தர்கள் சொன்னதெல்லாம் உருட்டும் புரட்டும்ன்னு கொஞ்சம் பேரு உருட்டி புரட்டிக்கொண்டு இருக்கிறத பார்க்கிறோம். ஒரு 30 வருஷத்துக்கு முன்னால எல்லாம் மிச்சம் கண் கண்ணாடி கடைகளோ நிறுவனங்களும் இந்த அளவுக்கு இல்ல! 80 வயசு வரைக்கும் நம்ம ஊரு தாத்தாவும், பாட்டியும், கண்ணாடி போட்டதா சரித்திரம் இல்லை! கண்ணாடி போட்டதே இல்ல முகத்துல கண்ணாடி இல்லாமல், வெறும் கண்ணாலேயே கல்லையும் கருப்பையும் எடுத்துட்டு இருந்த காலம் போயிடுச்சு! அழகுக்கு கண்ணாடி போட்ட காலம் போய் அவசரத்துக்கு கண்ணாடி போட்ட காலம் போய், இப்போ கண்ணிலேயே ஒட்ட வைத்துக்கொள்கிற கண்ணாடி வரைக்கும் வந்துருச்சு! கண்ணாடிய பத்தி பேசிக்கிட்டே போறதால காணி நெய்யை மறந்துட்டேன்! பாடலுக்குள்ள போகலாமா?
காணவே யின்னமொரு சூட்சக்கேளு
கருவான காணியடா பொன்னாங்காணி
தோணவே கொண்டுவந்து சாருவாங்கிச்
சுத்தமுடன் பசுவின்பால் சரியாய்ச்சேர்த்து
பூணவே காய்ச்சியுறைக் குத்திவைத்து
புத்தியுடன் மறுநாள் தான் தயிர்சிலுப்பி
வனவே சிலுப்பிவெண்ணை தனையெடுத்து
உத்தமனே தானுருக்கி நெய்யைவாங்கே (788)
இன்னும் ஒரு சூட்சுமம் இருக்குதுன்னு ஆரம்பிச்சு சிறப்பான காணி தான் பொன்னாங்கண்ணி என்று சொல்கிறார் பொன்னாங்கண்ணிக்கு கொடுப்பை சீதை சீதேவி அப்படிங்கிற பல பெயர்கள் இருக்குதுன்னு முன்னமே சொல்லியிருக்கோம்! கண்களுக்கு பொன் போல கண்ணும் கருத்துமா இருக்குதுங்கறதாலே பொன்னாங்கண்ணி என்று பெயர் வந்திருக்கும்! கொடுப்பை! இது வரத்தைப் போல பயன்களை அள்ளிக் கொடுப்பதாலோ என்னவோ கொடுப்பை என்று பெயரும், குளிர்ச்சியானது என்ற காரணத்தினால் சீதளம் என்கிற பெயரும், சீதை என்று பெயரும் வந்திருக்கலாம்! இந்த பொன்னாங்கண்ணியில் பல தாது பொருட்களும் வைட்டமின்களும் இருக்கிறது. கண்களை பாதுகாப்பதிலும் கண் கோளாறுகளை சரி செய்வதற்கும் பொன்னாங்கண்ணி சிறப்பான மூலிகையாகும். உணவுக்கும் பயன்படுகிறது, மருத்துவ பக்குவத்திலும் பயனளிக்கிறது. இப்படிப்பட்ட பொன்னாங்கண்ணி மூலிகையை வாங்கி, வெட்டி, சாறு பிழிஞ்சு எடுத்துட்டு வடிகட்டி, பசுவின் பாலோடு சேர்த்து காய்ச்சி சூடு ஆறுனதும், அந்த பாலில் உறை ஊத்தி, மறுநாள் தயிரானதும் எடுத்து, கவனமாக கடைஞ்சு வெண்ணெயை தனியே எடுத்து வச்சிட்டு, உருக்கி நெய்யை எடுத்து பத்திரப்படுத்திக்கனும்னு சொல்றார். அடுத்ததா,
வாங்கியந்த நெய்யதனைப் பதனம்பண்ணி
வரிசையுடன் விரலதனால் தொட்டுக்கொண்டு
பாங்குடனே கண்ண தனிற் தடவிமைக்தா
பத்தியுடன் தான்பார்க்கத் துலை தானோடும்
தாங்கியந்த செய்யதனைத் தலையிற்தேய்த்து
தலைமுழுகி யாகாசம் பார்த்தாயானால்
சாங்கமாய்ப் பகல்காலம் நட்சேத்திரங்கள்
தடையுறவே தோணுமடா தன்னைப்பாரே (789)
பொன்னாங்கண்ணி சாறு கலந்து காய்ச்சி எடுத்த நெய்யை, தினமும் காலைலயும், இரவு படுக்கைக்குப் போகும்போதும், கண்களுக்கு மேலே ஒரு சொட்டு நெய்யை, ஒரு விரலில் தொட்டு எடுத்துட்டு தடவிக்கிட்டே வந்தா கண் பார்வை சரியாகி தூரத்தில் இருக்கிற பொருளை கூட சரியா பார்க்க முடியும்னும், இந்த காணி நெய்யை தலைக்குத் தேய்ச்சுக் குளிச்சுட்டு வந்தால் கண் கோளாறுகள், கண் குறைபாடுகள், கண்ணுல வர்ற பிரச்சினைகளெல்லாம் தீர்ந்து கண் குளிர்ச்சியாகி, வானத்தைப் பார்த்தால் தூரத்திலே இருக்கிற நட்சத்திரங்களும் பகலிலேயே தெளிவா தெரியும்னும் சொல்கிறார்!
தலைக்கு எண்ணெய் தேயச்சுக்கறதே ஆச்சரியமா இருக்கிற இந்த காலத்துல, பொன்னாங்கண்ணி நெய் தலைக்கு தேய்க்க சொல்லி யாராவது சொல்லித்தந்து தேச்சாத்தான் உண்டு. அப்படி தேச்சாங்கன்னா கண்ணுல கோளாறு வராது! சின்ன வயசுலயே கண்ணாடி போடுவது குறைச்சுக்கலாம்! வந்த பிறகு வருத்தப்படுவதை விட, வர்ரதுக்கு முன்னமே கண்களை காப்பாத்திக்கணும்! பொன்னாங்கண்ணி மூளிகையாலே நெய் செய்து தலைக்கு தேய்ச்சாலும் கான்னுக்கு குளிர்ச்சி கிடைக்கும்! காய்கறி கடைகளை கிடைக்கிற பொன்னாங்கண்ணிக் கீரையை வாங்கி, வாரத்துக்கு ஒருமுறையாவது நல்லா சமைத்து சாப்பிட்டாலே போதும், உடம்பு பளபளன்னு இருக்கும், தலைமுடி பிரச்சினைகளும் வராது, கொஞ்சம் கீரையை அரைச்சு தலைக்கு தடவிட்டு, அரை மணிநேரம் கழிச்சு குளிக்கலாம்! தலைவலியும், தலை சுற்றுவதும், மயக்கமும் வராது! உடம்பு வெப்பம் தணிஞ்சு உடம்பை குளிர்ச்சியாக்கி சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் பொன்னாங்கண்ணி உதவி செய்யுறதை தெளிவா அகத்தியர் ஐயா சொல்லித்தந்தது நல்ல விஷயம் தானே!
பதிவைப் பார்த்தவர்களுக்கும், பகிர்ந்தவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள்!
இதன் வீடியோ பதிவை https://youtu.be/UIsJqAbhLdU?si=X7hZrBSW8gPHlick lakslead சேனலிலும் காணலாம்!