மருதாணி தங்கம் செய்யும் ரகசியம்!

அகத்தியர் சித்தர் சொன்னது!

வணக்கம் நண்பர்களே!
அகத்தியர் சொல்லித்தந்த மருதாணியில் தங்கம் என்கிற பாடல், அகத்தியர் கற்ப முப்பு குருநூல் என்கிற நூலில் 92 முதல் 94 வது பாடலாக தந்திருக்கிறார். அவர் தந்த பாடலை விளக்கமாகவும், அந்த பாடலில் இருக்கிற ரகசியத்தையும், இங்கே பதிவுடுகிறோம்! இந்த பாடலின் பக்குவமாக தங்கம் செய்யறதை வெளியில சொல்றதுக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்துச்சு! இருந்தாலும், தங்கம், தங்கம் தானே! செஞ்சு பார்த்து ஜெயிச்சிட்டா, அப்புறம் சொல்லனுமா?  இப்படி கூட அகத்தியர் ஐயா காலத்துல, மருதாணி தங்கத்தைப் பற்றியும், செய்யுற பக்குவத்தைப் பற்றியும், பலர் பலவிதமாவும் பேசிகிட்டு இருக்கலாம். இப்போது கூட இந்த பதிவைப் பார்த்து விட்டு இது ஏமாத்துற வேலைன்னும் கூட பலர் பல மாதிரி பேசிக்கிட்டு இருக்கலாம். சந்தேகப்படாம, கவனமா, பாட்டில சொன்னபடி  பக்குவத்தில். நம்பிக்கையோட சரியா செய்து பார்த்தா வெற்றி நிச்சயமா கிடைக்கும்ன்னு உறுதியா சொல்லித்தரார். அகத்தியரய்யா எழுதின மருதாணியில் தங்கம் என்கிற இந்தப் பாடலை படித்த பிறகுதான், அகத்தியரய்யா, இந்தப் பாடலில் தங்கம் பண்ற யோசனையையும், பக்குவத்தையும் கூட சொல்லித் தந்திருக்கிறார் என்று தெரிய வந்துச்சு! மருதாணி வச்சு எப்படி தங்கம் செய்யுறதுங்கறதுன்னு கேட்கறதுக்கே ஆச்சர்யமா இருக்குதில்லே! முழுவதையும் பார்த்தா இன்னும் ஆச்சர்யமா இருக்கும்!

உலோகத்தை உருக்குறதுக்கும், புடம்  போடுறதுக்கும்,  குழித்தைலம்  இறக்குறதுக்கும் தெரிஞ்சவங்களுக்கு, இந்த பாட்டுல சொன்ன பக்குவம் செய்யறதுக்கு கஷ்டம் இருக்காது. தெரியாதவங்க, தெரிஞ்சுக்கிட்டு செய்வது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்ல! தெரியாமலும், செஞ்சு பார்க்காமலும், இது பித்தலாட்டமுன்னு சொல்லிட்டு பேசாம போயிட்டே இருப்பாங்க! போனா கூட அதைப்பத்தின கவலை இல்லை, யாரையும் இதை செய்து பார்ப்பதற்கு சொல்லல! அகத்தியர் ஐயா சொன்ன, மருதாணியில் தங்கம் செய்து பாக்குறதுங்கறதுக்கு,  ரொம்பப் பொறுமையும், பக்தியும், நம்பிக்கையும் இருக்கணும்! அகத்தியர் ஐயா தந்த பக்குவத்தையும் ரகசியத்தையும் பாத்துட்டு வரலாமா?

தேருதற்கு இன்னமொரு தயிலஞ் சொல்வேன்

சிவமான மருதாணி சமூலம்வாங்கி

மாருவேன் வாசமுள்ள வெட்டிவேரும்

மகிமையுள்ள ஆதியந்தக் கருவுங் கூட்டி

பாருநீ சமனிடித்துப் பாண்ட த்திட்டு

பார்வதியைத் தியானித்துப் பாகத்தோடே

வாருகேள் குழித்தயில முன்போல் வாங்கி

மாதாவைப் பூசித்து வைத்துக்கொள்ளே  (92)

 தேருவதற்கு இன்னும் ஒரு தைலம் சொல்வேன்! வாழ்க்கையே வளமாக்கிறதுக்கு இன்னும் ஒரு தைலம் சொல்றேன்னு சொல்லிட்டு, சிவமான மருதாணி சமூலம் வாங்கி, மருதாணியோட இலையை ஒரு கைப்பிடி அளவுக்கு, மூணு கட்டு பறிச்சுட்டு வந்து, மொத்தமா சேர்த்து எடுத்துக்கிட்டு, கூடவே வெட்டிவேரும் சம அளவா சேர்த்து எடுத்துட்டு,

அடுத்து, ஆதியந்தக் கருவும் கூட சேர்க்கணும்! ஆதியந்தக் கரு என்பது, வழலை என்று சொல்லப்படுகிற சவுக்காரம் (soap) என்று பொருள் சொல்லப்பட்டாலும், மயில்துத்தம் (Copper(II) sulfate, cupric sulfate அல்லது copper sulphate, என்று சொல்லப்பட்டாலும், எளிதில் கிடைக்கின்ற பொருட்களான வழலை என்கிற சவுக்காரத்தையோ(soap), அல்லது மயில்துத்தத்தையோ எடுத்துகிட்டு, முதல்ல மருதாணி இலைய கல்வத்துல போட்டு இடிச்சுடனும்! அடுத்ததா, வெட்டி வேரையும் அதோட சேர்த்து இடிச்சுட்டு, எடுத்து வைத்திருக்கிற ஆதியந்த கரு என்கிற சவுக்காரத்தையோ, மயில்துத்தத்தையோ சேர்த்து நல்லா இடிச்சு எடுத்திட்டு, சாமியை கும்பிட்டுட்டு குழித்தயிலம் இறக்கணும்னும் சொல்றார்.

குழித்தயிலம் எப்படி இறக்குவது? தரையில ஒரு அடி ஆழத்துக்கும், 2 அடி அகலத்துக்கும் குழியை தோண்டி, அந்த குழிக்குள்ள ஈரமான சாணத்தை எடுத்து, கனமா ஒரு நாலு அங்குல  அளவுக்கு கனமா போட்டுட்டு, அதுக்கு மேல கொஞ்சம் வண்டல் மண்ணை கொட்டிட்டு,

ஒரு மண்பானையை எடுத்துட்டு அந்தப் பானையோட அடிப்பாகத்துல ஒரு அஞ்சு ஆறு சிறு துளைகள் போட்டு, அந்த துளைகளை அடைக்காத படிக்கு சிறு கம்பியை ஒரு ரெண்டு அங்குலம் வெட்டிட்டு, கம்பி கீழே விழாதபடி மடக்கி, உள்பக்கமா அந்த துளைக்குள்ளே சொருகிட்டு, ஒரு சிறு பானையை எடுத்து, வெளியிலே நீட்டிக்கிட்டிருக்கிற கம்பிகளை மூடின மாதிரி வச்சிட்டு, அந்த மண்சட்டியோட வாயை ஈரத் துணியை சுத்தி, களிமண்ணை எடுத்து, ஈரத் துணி மேல பூசி விட்டுட்டு, மேலே இருக்கிற பானைக்குள்ளே மருதாணி இலையையும், வெட்டி வேரையும், சவுக்காரத்தையும் சேர்த்து இடிச்சு வச்சிருக்கிறதையும் போட்டுட்டு, மேலே இன்னொரு மண்சட்டி எடுத்து, மூடி போட்டு மூடி, அதையும் களிமண்ணாலையும், ஈரத்துணியாலேயும் அந்த மூடியையும் பாத்திரத்தையும் சேர்த்து மூடிட்டு, இந்த மூடின பாத்திரத்தை மெதுவாக அந்த குழிக்குள்ளே உள்ள இறக்கி வச்சிட்டு, பானையை சுற்றியும், மேலேயும் சுமாரா ஒரு நூறு காய்ந்த எருவரட்டிகளை அடுக்கிக்கிடலாம்! எருவரட்டியை அடுக்கிட்டு, சாமியை கும்பிட்டு நெருப்பை பற்ற வைச்சுடனும்!  சுமாரா ஒரு அஞ்சு ஆறு மணி நேரம், நல்லா எருவரட்டியெல்லாம் எரிஞ்சு சாம்பல் ஆனதும் சூடு ஆறின பிறகு,

பானையை மேலே எடுத்துட்டு, கீழே இருக்கிற சின்ன பானைக்குள்ளே எடுத்துப் பார்த்தா, அதுல எண்ணெய் சேர்ந்திருக்கிறதை பார்க்கலாம்! இந்தமுறையில குழித்தயிலத்தை இறக்கி எடுத்துக்கணும். மருதாணியும், வெட்டிவேரும், ஆதியந்த கருவான சவுக்காரமும் சேர்த்து, குழித்தயிலம் இறக்கின தைலத்தை எடுத்து, பத்திரமா வச்சுட்டு அடுத்ததா,

வைத்திருந்த தயிலத்தின் மார்க்கங் கேளு

வலுவான தாரமுடன் கெவுரிவெள்ளை

ஐந்துநீ போகாதே துரிசு சூதம்

ஐந்துமே யோர்நிறையா யளவாய்த்தூக்கி

நைத்துநீ கல்வத்தி லிட்டுக் கொண்டு

நன்மையுள்ள தைலத்தை விட்டுஆட்டி

சித்தறிய மெழுகதனைச் சிமிளில் வைத்து

சிவகாமி தன்பதத்தை தியானிப்பாயே  (93)

குழித்தயிலம் இறக்கி எடுத்து வைத்திருக்கிறதோட விசேஷம் என்னதுன்னா, அரிதாரம், கௌரி பாஷாணம், வெள்ளை பாஷாணம் கூடவே துருசு, இதெல்லாம் ஒரே அளவா எடுத்துட்டு, இடிச்சு தூளாக்கிட்டு, பாதரசம் கூட சேர்த்து கல்வத்துல போட்டு, குழித்தயிலத்தையும் கொஞ்சமா விட்டு விட்டு அரைக்கிறபோது, மெழுகு பதத்தில் அரைஞ்சு கிடைக்கும். கிடைக்கிற மெழுகு விழுதை ஒரு கண்ணாடி பாத்திரத்திலயோ, சிமிழ்லேயோ எடுத்து வச்சுட்டு, அம்பாளைக் கும்பிட்டுக் கிடனும்னும் சொல்லிட்டு,

தியானித்து மெழுகதனைச் செம்பிற் பூசி

தீர்க்கமாய்ப் புடம்போடச் சிவந்துபோகும்

தயவான வெள்ளிதனிற் தடவிப் போட

தங்கமடா நல்ல தங்கஞ் சரிமாத்தாகும்

வயணமாய்ச் சரக்குகளில் தடவி வாட்ட

மணிபோலே கட்டியல்லோ யிருகிப்போகும்

மயமான ருத்திரனை வணங்கிக் கொண்டால்

வருகுமடா இதுகளெல்லாம் வழிதப்பாதே (94)

அப்படி கிடைக்கிற மெழுகை செம்புத்தகட்டின் மேலே பூசிட்டு, புடம் போடும்போது, செம்புத் தகடு செந்நிறத்துக்கு மாறி இருக்கும்னும், வெள்ளித் தகட்டின் மேலே பூசி புடம் போட்டு எடுத்தா, தங்கமாக, நல்ல தங்கமாக, சரியான மாத்தாக கிடைக்கும்னும், மற்ற வேறு உலோகங்களோட தகட்டின் மேலே, இந்த மெழுகை பூசி, புடம் போட்டு எடுக்கும்போது, மணிபோல இறுகி கட்டியாகிக் கிடைக்கும்னும், ருத்திரனை, சிவனை வழிபட்டுட்டு இதை செஞ்சு பாருங்க எதுவுமே தப்பாகாதுன்னும், உறுதியாகச் சொல்லித் தருகிறார் அகத்தியர் ஐயா!

சரியா செய்தா, எல்லாம் சரியா வரும்கிறது உண்மைதான்! சரியா செய்து பார்த்தா சரியாத்தான வரும்! புடம் போடுவதிலும், குழித்தயிலம் இறக்க தெரிந்தவர்களின் அறிவுரையோடும், ஆலோசனையோடும் செய்து பார்ப்பது நல்லது! முறைப்படியும், பக்குவத்தோடையும் சொல்லியபடியே, செய்து பார்த்தால் எந்த வேலையும் சரியாகவே வரும்! இந்த முறையில் செய்து பார்க்கும்போது, சரியாக வரலையேன்னு செய்த நேரத்தையும், செய்த வேலையையும் குற்றம் சொல்லி சங்கடப்படுத்தாமல், எங்கே தவறு நேர்ந்தது என்று தெரிஞ்சு, மறுபடியும் செய்து பார்த்தா சரியா வராமலா போகும்! அகத்தியர் ஐயா சொல்லித்தந்தது தங்கமான விஷயம் தானே!

பதிவைப் பார்த்தவர்களுக்கும், மற்றவர்களோடு பகிர்ந்தவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்!

Leave a comment